ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் கருணை மனு தள்ளுபடி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலி அமைப்பினரால் ஒரு தற்கொலை குண்டுதாரியின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது தொடர்பில் அவரது தாயார் அற்புதம் வழங்கிய செவ்வி. இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று இந்திய உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
நளினியின் தூக்கு தண்டனை சோனியா காந்தியின் தலையீட்டின் காரணமாக ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற மூன்று பேர்களான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தமது தண்டனையை குறைக்குமாறு கோரி இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்த கருணை மனுவே தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள விடயத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையின் பேச்சாளர் அர்ச்சனா தத்தா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply