தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை வரவேற்கத்தயார் : குணரட்ன

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கை வருவதற்கு விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை வரவேற்று சகல வசதிகளையும் செய்துகொடுக்க அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. இதுவரை 14 குடும்பங்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளன. அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.

வவுனியா அகதி முகாம்களில் தற்போதைய நிலைமையில் 4000 குடும்பங்களே எஞ்சியுள்ளன. இவ்வருடம் முடிவடைவதற்கு முன்னர் எஞ்சியுள்ள அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்பட்டுவிடுவர் என்றும் அவர் குறிப்பிட்டார். மீள்குடியேற்ற நிலைமை மற்றும் தமிழக அகதிகள் விடயங்கள் குறித்து தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் : தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகள் மீண்டும் இலங்கை வருவதற்கு விரும்பினால் அவர்களை வரவேற்று சகல வசதிகளையும் செய்துகொடுக்க மீள்குடியேற்ற அமைச்சு தயாராக இருக்கின்றது.

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதி மக்கள் தாம் எப்போதும் மீண்டும் இலங்கை வருவதற்கு உரிமையை கொண்டுள்ளார்கள். எனவே அவர்கள் இலங்கைக்கு வந்து சகல வசதிகளுடனும் குடியேற முடியும். தமது சொந்த இடங்களில் அந்த மக்கள் குடியேற முடியும்.

மேலும் இதுவரை 14 குடும்பங்கள் தமிழக அகதி முகாம்களிலிருந்து இலங்கைக்கு வந்துவிட்டன. அவர்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எனவே எமது பக்கத்தில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். அந்த மக்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வவுனியா அகதி முகாம்களில் தற்போதைய நிலைமையில் 4000 குடும்பங்களே தங்கியுள்ளன. அவர்களை விரைவில் மீள்குடியேற்றிவிடுவோம். இவ்வருடம் முடிவடைவதற்கு முன்னர் அந்த மக்களை குடியேற்றுவதே எமது நோக்கமாகவுள்ளது. கடந்தவாரமும் வன்னியில் 518 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டன. நிலக்கண்ணிவெடிகளே மீள்குடியேற்றத்துக்கு பாரிய தடையாக அமைந்துள்ளன. எனவே நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் மீள்குடியேற்றம் இடம்பெறும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply