கே.பி.யை பிடிக்க முடியுமானால் மர்ம மனிதர்களை பிடிக்க முடியாதா?

மலேசியாவிற்கு சென்று கே.பியை பிடித்து வர முடியுமென்றால் உள்ளூரில் நடமாடும் மர்ம மனிதர்களை அரசாங்கத்தால் பிடிக்க முடியாதா? என்று கேள்வியெழுப்பியுள்ள ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பல்துறை சார் பிரச்சினைகளை மூடி மறைக்கவும் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவும் மர்ம மனிதர்களை அர சாங்கம் கைது செய்யாது உலாவ விடுகின்றது என்று குற்றம் சுமத்தினர்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில், தற்போது நாட்டில் பல பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படுகின்றது. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

பொலிஸார் கைது செய்யும் நபர்களை விட்டு விடுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. எவ்வாறாயினும் இரவு நேரங்களில் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடமாடும் கிறீஸ் மற்றும் மர்ம மனிதர்கள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை.

ஏனென்றால் அரசாங்கம் தமது அதிகாரத்தையும் படை பலத்தையும் மிகவும் வெளிப்படையாக பிரயோகித்து புலிகளின் தலைவர்களில் ஒருவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை மலேசியாவில் வைத்து கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது. அதே போன்று உள்ளூரில் பல மோசடிக்காரர்களையும் பாதாளக் குழுத் தலைவர்களையும் கைது செய்து சிறையில் இட்டது. இவ்வாறான வீரதீர செயல்களில் ஈடுப்பட்ட அரசாங்கத்திற்கு உள்ளூரில் நடமாடும் மர்ம மனிதர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு காண முடியவில்லை என்றால் வேடிக்கையாகவே உள்ளது.

எனவே அரசாங்கம் உள்நாட்டில் உக்கிரம் அடைந்துவரும் இன்னோரன்ன பிரச்சி னைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. சர்வதேச ரீதியிலான மனித உரிமை மீறல் தொடர்பான அழுத்தங்கள் மேலோங்கியுள்ளன. மேலும் ஊழல் மோசடிகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. பொது மக்கள் அரசாங்கத்தை வெறுக்கும் நிலையில் உள்ளார்கள். ஆகவே தான் அரசாங்கம் மறு படியும் பொது மக்களின் கவனத்தை திசைத் திருப்ப மாயைகளை உலாவ விடுகின்றது.

மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பிர தேசங்களிலும் திட்டமிட்டு உலாவும் மர்ம மனிதர்களை கைது செய்ய முடியவில்லை என்றால் நாட்டிற்கு பொலிஸ் எதற்கு?
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் பொலிஸாரும் தவறிழைத்துள்ளனர் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply