சென்னை செல்லும் இலங்கையர்கள் தமிழ்நாடு பொலிஸில் பதிவு செய்ய வேண்டும்

தமிழ்நாட்டிற்கு சுற்றுலா மேற்கொள்ளும் இலங்கையர்கள் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் உடனடியாக தமிழ்நாடு பொலிஸில் பதிவு செய்ய வேண்டும் என இலங்கைக்கான துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை சுற்றுலா பிரயாணிகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே மேற்படி நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், பதிவுகளை மேற்கொள்வதற்கான சேவைகள் விமான நிலையத்தினுள்ளேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஷேடமாக தம்பதிவ தலயாத்திரை மேற்கொள்பவர் இங்கு பதிவுகளை மேற்கொள்ளுதல் மிக முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை யாத்திரிகர்கள் இவ்வாறு பதிவினை மேற்கொள்வதன் மூலம் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யக் கூடியதோடு, அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply