சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்கலாம்; மத்திய அரசு எச்சரிக்கை

சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் 64வது சுதந்திர தினத்தைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. இந்நிலையில் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு சில பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறினார்.

அவர் மேலும் கூறியது: இது பொதுவான எச்சரிக்கை தான். பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. 15ஆம் திகதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில இயக்கங்கள் ஆகஸ்ட் 14ஆம் திகதியை வேறு மாதிரி அனுசரிக்க திட்டமிட்டுள்ளன.

ஒட்டு மொத்த இந்தியாவும் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில் ஒரு சில இயக்கங்கள் அதை சீரழிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து முந்தைய ஆண்டுகளைப் போன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பொது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply