குகநாதன் மீதான தாக்குதலுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பஸ் நிலையத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீதரன், எஸ்.சரவணபவன், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

ஐந்து ஊடக அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் பலர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினர்.

யாழ். பஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக யாழ். நகரைச் சுற்றி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘யாழ். மண்ணில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்போம்’, ‘கைதுசெய் கைதுசெய் குகநாதன்  மீது தாக்குதல்கள் நடத்தியவர்களை கைதுசெய்’ ‘குகநாதானுக்கு விழுந்த அடி உண்மைக்கு எதிரான பேரடி’, ‘ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறையை ஒழிப்போம்’, ‘ஊடக ஜனநாயக உரிமைகளை பாதுகாப்போம்’, ‘கண்டுபிடி கண்டுபிடி சூத்திரதாரிகளை கண்டுபிடி போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply