அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் மீள்பரிசீலனை அவசியம்: உதயராசா

வடக்குகிழக்கில் மர்ம மனிதர்களது செயற்பாடானது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. மக்கள் அச்சத்துடன் கண் விழித்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. மர்ம மனிதர்களின் விவகாரத்தால் ஏற்பட்ட கலகங்களில் பெருமளவான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மர்ம மனிதர்களின் விவகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டியது அவசியமாகும் என்று ஸ்ரீரெலோ அமைப்பின் தலைவர் ப.உதயராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் கடந்த பலவருடங்களாக அமுல் படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை வரவேற்கத்தக்க நடவடிக் கையாகும். இதன் மூலம் நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்படும் என் றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெவிக்கப்பட்டுள்ளதாவது: மர்ம மனிதர்களின் செயற்பாட்டினால் வடக்கு கிழக்கில் மக்கள் அச்சத்தில் உரைந்து போயுள்ளனர். மர்ம மனிதர்களின் விகாரம் தொடர்பில் உரிய பதிலை அரசாங்கம் வழங்குவதாக இல்லை. மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தின் பேல் கைது செய்யப்படும் நபர்கள், தொடர்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகமான நிலை உருவாகி யுள்ளது.

எனவே, மர்ம மனிதர்கள் விவகாரத்திற்கு தீர்வொன்றினை காணவேண்டும். யாழ்ப்பாணம், வன்னி, பகுதிகளிலும், கிழக்கில் பல பகுதிகளிலும், மர்ம மனிதர்களின் நடமாட் டம் தொடர்ந்தும் காணப்படுவதாக மக்கள் முறையிடுகின்றனர். இத்தகையவர்களின் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவது அவசியமாகும்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட் டுள்ளது. இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கதாகும். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும், மீள்பரிசீலனை அவசியமானதாகும்.

http://epaper.virakesari.lk

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply