நாட்டில் நடைபெறும் போரை வைத்து பல கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயல்கிறார்கள்:ஆனந்த சங்கரி

வடக்கேயுள்ள கிளிநொச்சி நகரை இம்மாதம் இரண்டாம் தேதி கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவித்த பிறகு இது தொடர்பில் இலங்கையிலும், இந்தியாவிலும் பல்வகையான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

பல ஆண்டுகள் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான ஆனந்த சங்கரி, கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கை இன்னமும் பல ஆண்டுகள் முன்னரே நடைபெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கிளிநொச்சியை அரசு கைப்பற்றி விட்டாலும், நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக இன்னமும் அரசியல் தீர்வை முன்வைக்காதது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்றும் கூறினார்.

தற்போதுள்ள நிலையில் இந்தியா போர் நிறுத்தத்தை வலியுறுத்தாமல், அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஆனந்த சங்கரி அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் நாட்டில் நடைபெறும் போரை வைத்து அரசியல் இலாபம் தேட முயல்கிறார்கள் என்று தெரிவித்த ஆனந்த சங்கரி அவர்கள் இதை பொருட்படுத்தாமல் தைரியமாக ஒரு முடிவெடுக்கும்படி ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply