ரொபர்ட் ஓ பிளெக் வருகை பின்போடப்பட்டுள்ளது

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வீசும் இரேன் சூறாவளியே இதற்குக் காரணமென தெரியவருகிறது.

நாளை திங்கட்கிழமை முதல் 31 ஆம் திகதி புதன்கிழமை வரை அவர் இலங்கைக்கு விஜயம் செய்து அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரை சந்திப்பார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருந்தது.

எனினும், இவ்விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதை  கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விஜயத்திற்கான புதிய திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply