அரசு கூட்டமைப்புடன் பேச்சை ஆரம்பிப்பதே ஆரோக்கியமானது

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு தொடர்பில் அரசாங்கத்திடம் காணப்பட்ட இதய சுத்தியற்ற போக்குகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை தளர்வு பெறுவதற்குக் காரணமாகி விட்டதென ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துகையில் அதன் பிரதிப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக அமைய வேண்டும் என்று அரசாங்கம் நினைக்குமேயானால், சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபட வேண்டுமேயானால் உடனடியாக கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு நியாயபூர்வமான பதிலை அளித்து, பேச்சுக்களை மீண்டும் ஆரம்பித்து தீர்வுகளுக்கு வழிகாணுமாறும் அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை தடைப்பட்டிருப்பது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அதன் பிரதிப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply