கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது: எஸ்.எம்.கிருஷ்ணா

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான பகுதியெனவும், அங்கு மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

1974-1976 ஆண்டுகளில் கடல் எல்லை குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் கச்சதீவை அண்மித்த பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடு முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் கச்சதீவில் வலைகளை உலர வைப்பதற்கும், புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்வதற்கும் இந்திய மீனவர்களுக்கு உரிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மீனவர்கள் 104 பேர் இன்னமும் இந்திய சிறைகளில் இருப்பதாகவும், எனினும் இலங்கை சிறைகளில் இந்திய மீனவர்கள் எவரும் தற்போது தடுத்துவைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கச்சதீவில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கபோவதில்லை என இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவாசமும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply