விசுவமடுவில் தபால் விநியோகம் சீரின்மை
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விசுவமடுப் பிரதேசத்தில் தபால் விநியோகம் சீரில்லாமல் இருப்பதால் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.
மீளக்குடியேறியுள்ள மக்கள் தமது தொடர்பாடல் நடவடிக்கைகளுக்காகவும் வங்கி அலுவல்களுக்காகவும் பெரிதும் தபால் போக்குவரத்தையே நம்பியிருக்கின்றனர். 1970 ஆண்டுகளில் படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் குடியேற்றம் செய்யப்பட்ட விசுவமடுவில், அப்போதைய தேவைக்கமைய விசுவமடு உப தபாலகம் அமைக்கப்பட்டது.
ஆனால், பின்னர், இந்தப் பகுதி விஸ்தரிக்கப்பட்டு பல கிராமங்கள் உருவாகிச் சனத்தொகையும் குடியிருப்புகளும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் தபால் நிலையம் விஸ்தரிக்கப்படாத நிலையில் இருப்பதுடன், புதிய உப தபாலகங்களும் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது, விசுவமடு உபதபாலகத்தின் மூலம், பிரமந்தனாறு, விசுவமடு கிழக்கு, விசுவமடு மேற்கு, புன்னைநீராவி, பாரதிபுரம், இளங்கோபுரம், உழவனூர், வள்ளுவர் புரம், றெட்பானா, மாணிக்கபுரம், மயில்வாகனபுரம், குமாரசாமிபுரம், கண்ணகிநகர், கல்லாறு ஆகிய பிரதேசங்களுக்கான தபால் விநியோகம் நடைபெறுகிறது.
குடித்தொகை காரணமாகவும் கிராமங்களின் அதிகரிப்பு காரணமாகவும் தபால் விநியோகங்களைச் செய்வதில் தமக்குப் பலத்த சிரமங்கள் உள்ளதாக தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
விசுவமடு பகுதியை மையப்படுத்தி தபால் சேவைகள் நடைபெறுவதால், ஏனைய இடங்களுக்கான தபால்களை ஊழியர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கடைகளில் கொடுத்துச் செல்வதாகவும் இதனால், உரிய காலப்பகுதியில் தம்மால் கடிதங்களைப் பெறமுடியாதிருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply