புலிகள் மீதான தடை நீக்கப்படமாட்டாது: சட்டமா அதிபர்

அவசரகாலச்சட்டம் நீக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளபோதும், அந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் எவரும் விடுவிக்கப்படமாட்டார்கள் எனவும், நாட்டிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படமாட்டாது எனவும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

“அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளபோதிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் பல விதி முறைகளை சோ்ப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் யாவும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது” என்றார் அவர்.

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் உயர்பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட்டால் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகும் நிலை தோன்றிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய விதிமுறைகளுக்கமைய தடுப்புக்காவலிலுள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் கையாளப்படுவார்கள் எனவும் , அவசரகாலச்சட்டத்தின் பின் ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் சிறப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் எனவும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் தடுப்புக்காவலிலுள்ள சுமார் 1,400 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று நீதியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply