யாழ்ப்பாணம், மன்னார் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடி ஏற்றி இராணுவத்தினருக்கு கௌரவம்

கிளிநொச்சி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டமையைக் கொண்டாடும் நோக்கில் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் உள்ளிட்ட சில இடங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. 
 
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம், கல்வித் திணைக்கள அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, கிளிநொச்சி மோதல்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கு மௌன அஞ்சலி நெலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, மன்னார் நகரின் பல்வேறு இடங்களில் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன், இராணுவத்தினருக்கு ஆசிவேண்டி வணக்கஸ்தலங்களில் விசேட வழிபாடுகள் நடத்தப்பட்டதாக எமது மன்னார் செய்தியாளர் அறியத்தருகிறார்.

இதேவேளை, கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் அரசாங்க அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, உயிரிழந்த இராணுவத்தினருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply