மர்ம மனிதன் விடயத்தில் ஜனாதிபதி அமைதி காப்பது அரசுக்குக் கேடு
யாழ்ப்பாணத்தில் தொடரும் மர்ம மனிதன் விவகாரத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் அமைதி காப்பது அரசுக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன். இந்த விவகாரத்தில் தலையிட்டு மர்ம மனிதர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
குடாநாட்டில் மர்ம மனிதர்களால் ஏற்பட்டுள்ள அச்சநிலை குறித்து விளக்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு திருமதி விஜயகலா மகேஸ்வரன் கடிதமொன்றை நேற்றுமுன்தினம் அனுப்பி வைத்துள்ளார்.
இந்தக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
யாழ். குடாநாட்டில் கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் மர்ம மனிதர்களின் அடாவடித்தனங் கள் தொடர்ந்து வருகின்றன. இதனை அடுத்து ஏற்பட்ட கலவரங்களில் பெருமளவான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மீது கண் மூடித்தனமான தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.
பெண்களுக்குப் பாதுகாப்பாக வேலைக்குச் செல்லும் ஆண்களும் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரையை அண்டிய பகுதிகளில் மர்ம மனிதர்களின் அடாவடித்தனங்கள் தொடர்வதனால் கடற்றொழிலாளர்கள் இரவில் தொழிலுக்குச் செல்ல முடி யாத சூழலும் உருவாகியுள்ளது.
இத்தகைய பாதிப்புக்களிலிருந்து மக்களை மீட்கவேண்டியது அரசின் கடமையாகும். யுத்தத்தை வெற்றிகொண்ட அரசு பாதாள உலகக் கும்பல்களை இல்லாது ஒழித்து வரும் அரசு மர்ம மனிதர்களின் அடாவடித்தனங்களை ஒழிக்க முடியாதது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே மர்ம மனிதர்களின் அடாவடித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மர்ம மனி தர்களின் விவகாரத்தில் மௌனம் காப்பது அரசுக்கு அபகீர்த் தியை ஏற்படுத்தும் எனவே இந்த விடயத்தில் துரிதமாக செயற்படுவீர்கள் என நம்பு கிறேன் என்றுள்ளது.இந்தக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் டி.எம்.ஜயரத்தின, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply