தரமுயர்த்தும் திட்டத்தில் வடகிழக்கு பல்கலைக் கழகங்கள் புறக்கணிப்பா?
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அனைத்துலகத் தரத்துக்கு உயர்த்தும் திட்டத்தில், யாழ். பல்கலைக்கழகம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களை அரசு புறக்கணித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்விதமான உண்மையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக அரசாங்கம் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் அதில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் வேண்டுமென்றே விஷமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விடயம் தொடர்பாக இன்னமும் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் தமது கற்பனையில் சிலர் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும். அவ்வாறு ஒரு திட்டம் அமுலாக்கப் படும்போது அரசாங்கம் அனைத்துப் பல்கலைக்கழகங் களையும் ஒரே கண்ணோட்டத்திலேயே நோக்கும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply