குடாநாட்டில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உதவி

யாழ் குடாநாட்டில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் நிலைமைகளை மேட்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்திருப்பதாக சமூச சேவைகள், சமூக நலன்புரித்துறை அமைச்சர் அறிவித்துள்ளது.
 
கடத்தல்கள் காரணமாக பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், கைதுசெய்யப்பட்டிருப்பவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டுத் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களின் குடும்பங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சமூக சேவைகள், அமைச்சு அலுவலகத்துக்கு வந்து விபரங்களைக் கொடுத்தால் அவர்களை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுப்பார் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, கடந்த 30ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் காணாமல் போயிருப்பதாக உறவினர்கள் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply