உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு காணிகளை உரியோரிடம் மீள ஒப்படைக்க வேண்டும்: ரணில் விக்ரமசிங்க
அவசரகாலச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அனைத்து அதி உயர் பாதுகாப்பு வலயங்களும் அகற்றப்பட்டு உரிய உரிமையாளர்களிடம் அவர்களின் காணிகள் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள மர்மமனிதன் தொடர்பான பிரச்சினையை கட்டுப்படுத்துமாறும் அவர் குறிப் பிட்டார். யாழ். பிரதேசத்தில் இடம் பெற்று வருவதாக கூறப்படும் கிaஸ் பேய் அச்சம் தொடர்பாக பாராளு மன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
யாழ்ப்பாண மக்கள் மீதான கிaஸ் பூதத்தின் கெடுபிடிகளை தடுக்க இராணுவத்திற்கு முடியாது போனது சம்பந்தமாக ஓகஸ்ட் 23ஆம் திகதி இந்த சபையில் நான் சுட்டிக்காட்டி னேன். ஏனைய உறுப்பினர்களும் இவ்விடயம் சம்பந்தமாக சபையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கம் இவ்விடயத்தைக் கருத்திற் கொண்டு யாழில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும் என நாம் எதிர்பார்த் தோம். எனினும், துரதிர்ஸ்டவசமாக இது நடைபெறவில்லை.
நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மர்ம மனிதர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்வதுடன் யாழ். குடாநாடு முழு வதும் ஒருவித பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப் படுத்த அரசாங்கம் இதுவரை எது வித நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை.
ஓகஸ்ட் 30ஆம் திகதி கோண்டா வில் பிரதேசத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்றதுடன், அதே தினத் தன்று இரவு 8.30 மணியளவில் திரு நெல்வேலி பிரதேசத்தில் மற்று மொரு சம்பவமும் இடம்பெற்றுள் ளது. அத்துடன் கொக்குவில் யாழ். மருத்துவ பீடத்திற்கு அருகாமையி லும், செப்டெம்பர் 01ஆம் திகதி உரும்பிராய், குருநகர் போன்ற பிரதேசங்களிலும் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
யாழ். மக்களை அச்சத்தில் ஆழ் த்தும் ஒரு சடுதியான செயலாகவே இதை மக்கள் கருதுகின்றனர்.
தற்போது 50,000 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் யாழில் கடமை யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ் ப்பாணத்தில் 20-30% பிரதேசம் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலேயே காணப்படுகிறது. வீதித்தடைகளும் 24 மணிநேர பாதுகாப்பு ரோந்துச் சேவையும் காணப்படுகிறது.
கிaஸ் பூதத்தைத் தடுப்பதற்கு இவர்களால் முடியும். அவசரகாலச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்த அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களும் இர த்தாகின்றன. அதன்பிரகாரம் உயர் பாதுகாப்பு வலயத்திற்காகப் பெற்றுக் கொண்ட காணிகளை உரிய உரிமை யாளர்களுக்கு வழங்கப்பட வேண் டும். மீண்டும் இவைகளை உரியவர் களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
இவ்விடயம் சம்பந்தமாக யாழ்ப் பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அரசாங்க தரப்பு யாழ். பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றை நியமி த்து, இதற்காக தேவையேற்படும் போது ஆலோசனை வழங்கக்கூடிய நபர்களையும் இணைத் துக்கொண்டு அக்குழுவின் மூலம் இவ்விடயம் சம்பந்தமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply