மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம்; கடும் நடவடிக்கைக்கு பணிப்பு
அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றினுள் வைத்து மாணவியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது தராதரம் பாராது கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ. தே. க. மாத்தறை மாவட்ட எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் சமயமே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், அக்குரஸ்ஸ கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றி வைத்து மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனைக் குரிய விடயம். இச்சம்ப வத்தையிட்டுப் பெரிதும் கவலைய டைகின்றேன்.
இச்சம்பவம் இடம்பெற்றுள்ள பாடசாலை க. பொ. த. உயர்தரப் பரீட்சை நிலையமாக செயற்பட்டது. பரீட்சைகள் முடிவுற்றதும் பிரதேச பெற்றோர் பாடசாலையைச் சுத்த ப்படுத்துவதற்கு வந்துள்ளார்கள். பெற்றோருடன் வந்த மாணவியொ ருவரே இவ்வாறு துஷ்பிரயோ கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைக் கேள்வியுற்றதும் உடனடியாக ஜனாதிபதியின் கவன த்திற்கு கொண்டு சென்றேன்.
அதனடிப்படையில் இச்சம்பவத்து டன் தொடர்புடையவர்கள் மீது தராதரம் பாராது கடும் சட்ட நட வடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறி வுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதேநேரம் இச்சம்பவம் தொடர் பான பொலிஸ் விசாரணைக்கு மேலதிகமாக கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் தனித் தனியாக இரண்டு விசாரணைகளை மேற்கொள்கின்றன.
இனிமேல் இப்படியான மோச மான சம்பவங்கள் இடம்பெறாதி ருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இச்சம்பவ த்தில் ஈடுபட்டுள்ளவ ர்களுக்கு எதிராக கடும் சட்ட நட வடிக்கை எடுக்கப்படும் என்பதை இச்சபையில் அறிவிக்கின்றேன் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply