ஆனையிறவு தெற்கை படையினர் வளைத்துள்ளனர். புலிகளின் குறிஞ்சதீவு தளமும் முற்றாக அழிப்பு

முதலாவது செயலணி படையினர் ஆனையிறவுக்கு தெற்கு பகுதியை அண்மித்துள்ளனர். யாழ்குடாவுக்கு தெற்காக தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி கிழக்கு களப்பு ஓரத்தில் அமைந்துள்ள குறுஞ்சதீவு கிராமத்தை  முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குறுஞ்சதீவை படையினர் கைபற்றியதால் புலிகளுக்கு இறுதியாக ஆனையிறவு, கிளாலி, முகமாலை ,நாகர்கோவில் பகுதிகள் உள்ளதாகவும் இவைகள் இன்னும் சில தினங்களுக்குள் கைபற்றிவிடப்படும் என படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறுஞ்சதீவு கிராமம் உயர் நிலத்தில் அமைந்துள்ளதால் இப்பகுதியிலிருந்து ஆட்டிலறி போன்ற பாரிய தாக்குதல்களை வளைத்து எல்லாப்பகுதிகளுக்கும் தாக்கும் தகமை உடையதால் படையினரின் எதிர்கால படைநடவடிக்கைகளுக்கு பெரும் உந்து சக்தியாக விளங்கும் என படைஅதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புலிகளின் இறுதி தளமான முல்லைத்தீவை நோக்கி முதலாவது செயலணிபடையினர் தனியாக தாக்குதல் வேகத்தை அதிகரித்துள்ளதாக பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனையிறவு யாழ்குடாவுக்கான பிரதான வாயிலாகும், இது எக்கால நிலையிலும் பயணம் செய்யக் கூடிய பிரதேசமாகும். 1991ஆம் ஆண்டு புலிகள் ஆனையிறவில் நிலை கொண்டிருந்த படையினர்  மீது வெடிபொருள் நிரப்பிய டோசர் மூலம் தாக்கமுற்பட்ட வேளை கோப்ரல் காமினி (சிங்க ரெஜிமெற்) தனது கைகுண்டை வெடிக்க வைத்து புலிகளின் டோசரை அழித்து பாரிய சேதத்தைத் தடுத்து தனது உயிரையும் துறந்தார். இதற்காக அவருக்கு வீர விக்ரம விபூசன பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply