சர்வதேச மன்னிப்புச் சபை நாட்டின் இறைமையில் தலையீடு
சர்வதேச மன்னிப்புச் சபை நாட்டின் இறைமையில் தலையீடு செய்வதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை விசாணையின்றி முன்கூட்டியே தீர்ப்பை வழங்கும் நீதவானைப் போன்று செயற்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதியளவில் வெளியிடப்பட உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே சர்வதேச மன்னிப்புச் சபை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்த முன்கூட்டிய எதிர்வு கூறல் மற்றும் விமர்சனம் போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் சுயாதீனமான ஓர் நாட்டின் இறைமையில் தேவையின்றி தலையீடு செய்யும் செயலாக கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த புதன்கிழமை உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி 69 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply