கிரிக்கெட் போன்று சர்வதேச சட்டங்கள் அரசியலுக்கும் தேவை
சர்வதேச ஜனநாயக நாடுகள் தேர்தலை நடத்தும் முறையும் நம் நாட்டில் தேர்தல் நடைபெறும் முறையும் நேர் மாறாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டைப் போன்று சர்வதேச சட்டங்கள் அரசியலுக்கும் தேவை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார். கண்டியில் இடம் பெற்ற கூட்டமொன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
கண்டி புஷ்பதான மண்டபத்தில் இடம் பெற்ற இவ் வைபவத்தில் அவர் மேலும் கூறியதாவது
உலகத்திலுள்ள ஜனநாயக நாடுகள் தேர்தலை நடத்தும் போது மேற்கொள்கின்ற நடவடிக்கைகளும் எமது நாட்டில் தேர்தல் நடைபெறும் போது பின்பற்றப்படும் முறையும் எதிர்மாறாக உள்ளது.
உலகில் மற்றைய நாடுகளில் தேர்தல்கள் ஒரே முறையில் இடம் பெற்றாலும் எமது நாட்டில் பகுதி பகுதியாகவே பிரித்துப் பிரித்து துண்டாடி அடாவடித்தனங்களை மேற்கொண்டு குறிப்பிட்ட சிலர் தமது பலத்தை முழுமையாகக் குவியச் செய்து அரசியல் செய்கின்றனர். அதன் அடிப்படையிலே மக்களை திசை திருப்பி தேர்தல்களை நடத்துகின்றனர்.
நாங்கள் கிரிக்கெட்டை ஒரு தலை சிறந்த கனவான் விளையாட்டாக மதிக்கின்றோம். அதற்குக் காரணம் கிரிக்கெட்டிலுள்ள சர்வதேச சட்டதிட்டங்களாகும். அதே போன்று அரசியலுக்கும் சர்வதேச சட்டதிட்டங்கள் அவசியம்.
அரச கட்சியும், எதிர்க் கட்சியும் சமமாக நின்று தேர்தலில் போட்டியிட வேண்டும். மாறாக ஆளும் கட்சி அரச வளங்களையும் வாகனங்களையும் ஊகங்களையும், அடாவடித்தனங்களையும், ஆட்சிப் பலத்தையும் பாவித்து சட்ட விரோதமான முறையில் வாக்குகளை பெறுமானால் அங்கு ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.
திஸ்ஸ அத்தநாயக்க போன்ற அரசியல் வாதிகளின் தியாகங்களை தமது வாழ்வில் மேற்கொள்வதன் மூலம் ஒருவர் அரசியலில் பிரகாசிக்க முடியும். அத்துடன் படிப்பினைகளையும் இளம் சமுதாயம் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply