அரசியல் தீர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு தொடர்பில் பேச்சு

அரசியல் தீர்வு, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை, இராணுவ மயமாக்கல், காணி அபகரிப்பு தொடர்பில் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ பிளேக் உடனான சந்திப்பின் போது தெளிவாக விளக்கிக் கூறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

ஹில்டன் ஹோட்டலில் இன்று காலை 7 மணிமுதல் 8.15 மணிவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தனும் எம். ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் நிலைப்பாடு தொடர்பில் கேட்டதாகவும், இதன் மூலம் சிறந்த தீர்வொன்றை எதிர்பார்க்க முடியாது என்றும் இது சுயாதீன மற்றது என்றும் இதன்மூலம் தமிழ் மக்களுக்குப பொருத்தமான தீர்வொன்றை எதிர்பார்க்க முடியாது என்றும் அவரிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் அமெரிக்க தூதுவர் திருமதி பெட்ரீசியா பூட்டனிஸூம் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply