முள்ளிக்குளம் கிராம மக்களை மீள்குடியேற்றக்கோரி மௌன ஊர்வலம்
மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் இடம்பெயர்ந்து 4 வருடங்கள் கடந்துள்ள நிலையில் உடனடியாக தங்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி மௌன ஊர்வலமொன்றில் ஈடுபட்டனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் செபஸ்ரியார் தேவாலயத்தில் ஒன்று திறண்ட முள்ளிக்குளம் கிராமத்தினைச் சேர்ந்த சுமார் 1500 இற்கும் மேற்பட்ட மக்கள், மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் ஆசீர்வாதத்துடன் தமது மௌன ஊர்வலத்தினை ஆரம்பித்தனர்.
மேற்படி ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பாஸக்ர் பகுதியூடாக மன்னார் மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தது.
இந்த ஊர்வலத்தின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, அருட்தந்தையர்கள், முள்ளிக்குளம் கிராம மக்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் (தமிழ் ஈழ விடுதலை இயக்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின் கிராம மக்களினால், மன்னார் மறைமாவட்ட ஆயர் முன்னிலையில் மன்னார் மாவட்ட அரசாஙக அதிபர் என்.வேதநாயகனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் அதனை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply