இறுதிக் கட்ட யுத்த நிலைமைகளை ஆராய இன்னொரு ஆணைக்குழு
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த நிலைமைகள் தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கீ மூனினால் மேலுமொரு தனிநபர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. 2009 ஆம் ஆண்டின் மிகப் பிந்திய, யுத்த இறுதிக்கட்ட காலப் பகுதியில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இந்தத் தனிநபர் ஆணைக்குழு ஆராயும் எனத் தெரிய வருகிறது.
முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது மக்களை காக்க ஐக்கிய நாடுகள் தவறியமை மற்றும் ஐ. நா. பணியாளர்கள் தமிழர் வாழ் இடங்களை விட்டு வெளியேறியமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயற்பாடு மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனை முன்னயை நிபுணர் குழு அறிக்கையும் விமர்சனம் செய்திருந்தது. இந்த விமர்சனங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பான் கீ மூன் தனிநபர் குழு ஒன்றை அமைத்துள்ளார். ஐ. நா வின் சனத்தொகை புள்ளிவிபரப் பிரிவின் முன்னாள் ஆணையர் தொராய ஓபிட் என்பவரே இந்த குழுவின் தனிநபர் ஆணையராவார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply