இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதற்கு வருந்தவில்லை
இலங்கையில் பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டமை தொடர்பில் பிரித்தானிய வருந்தவில்லை. பிரித்தானியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமென இலங்கை மற்றும் மாலை தீவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது தொடர்பில் மின்னஞ்சல் மூலமாகவும் சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உயர்ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்ட காணொளியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் நிலவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். வரரலாற்றுக் காலம் முதலே இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய பிணைப்பு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதும் காத்திரமானதுமான தீர்வு ஒன்றை எட்ட வேண்டுமாயின் பிரச்சினைக்கான மூலக் காரணிகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட அயர்லாந்து பிரச்சினையின் போது பிரித்தானியா இதனை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply