இந்தியா மற்றும் நேபாளத்தில் நிலநடுக்கம்: டெல்லிவரை உணரப்பட்டது

வட இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பூகம்பத்தினால் பத்துப் பேர் கொல்லப்பட்டதுடன் அதனை அண்டிய நேபாளப் பிரதேசத்தில் ஐவரும் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடஇந்தியாவில் இந்திய நேரப்படி நேற்று மாலை 6.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் சிக்கிம் மாநிலம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 64 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் சிக்கிம் மாநிலத்திற்கும் நேபாள எல்லைக்கும் இடையேயுள்ள இடமாகும். இதனால் சிக்கிம் மாநிலம் முழுவதும் மின்சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் சிக்கிம் மாநிலம் பேரவை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. பல குடியிருப்பு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டடுள்ளதாகவும், சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டது. அதிர்வுகள் ரிக்டர் அளவில் 6.1 மற்றும் 5.3 என பதிவாகியுள்ளது. இந்நிலடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் தலைநகரம் டெல்லி, மே.வங்காளம், உ.பி., பீகார், அதைச்சுற்றியுள்ள வடமாநிலங்களில் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதையொட்டி சிக்கிம் முதல் அமைச்சர் பவன் சாம்லிங் அவரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்துள்ளார். நிலநடுக்கம் குறித்து பாரத பிரதமர் மன்மோகன்சிங் அவருடன் பேசியுள்ளார். மேலும் தேவையான உதவி செய்வதாகவும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply