நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் கடன் வழங்குவதனை சர்வதேச நாணய நிதியம் ஒத்தி வைத்துள்ளது

நிபந்தனைகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாத காரணத்தினால் கடன் வழங்குவதனை சர்வதேச நாணய நிதியம் ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அரசாங்க நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்கி வருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலைமைகளை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் கட்டம் கட்டமாக கடனுதவிகளை வழங்கி வருகின்றது.
 
ஒன்தாம் கட்ட கடனுதவியை வழங்குவது குறித்த மதிப்பீடுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மேற்கொள்வதில்லை என நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.
 
2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் கட்டம் கட்டமாக சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் கட்ட கடனுதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் கடனுதவி வழங்கும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமை ஆரோக்கியமாக காணப்படுகின்றது என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
 
பொருளாதார நிலைமைகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளை ஒத்தி வைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கமே கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பொருளாதாரம் அபிவிருத்தி அடைந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடனோ அல்லது உதவியின்றிறோ நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய இயலுமை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, மதிப்பீடுகளை காலம் தாழ்த்தி நடத்துமாறு அரசாங்கமே கோரிக்கை விடுத்தது என சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply