பாராளுமன்றத் தெரிவுக்குழு தீர்வுத் திட்ட யோசனையில் நம்பிக்கையில்லை : சம்பந்தன்

பாராளுமன்றத் தெரிவுக்குழு தீர்வுத் திட்ட யோசனையில் நம்பிக்கையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கட்டம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், சில தரப்பினர் இந்த நோக்கத்தை பிழையான அர்த்தப்படுத்தி பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதனால் பாராளுமன்றத் தெரிவுக்குழு பற்றி சிந்திக்க வேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply