எம்.டி.வி, எம்.பி.சி கலையகங்கள் மீதான தாக்குதல் குறித்து முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு
எம்.டி.வி, எம்.பி.சி கலையகங்கள் மீது இன்று காலை ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார்.
அதேவேளை இன்று காலை ஆரம்பமான 2009 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வில் எம்.பி.சி, எம்.ரி.வி கலையகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி தலைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply