பயங்கரவாதிகளின் ஆபத்தை வல்லரசுகள் உணர்ந்து கொண்டன : ரவூப்
பயங்கரவாதிகள் நிதி திரட்டுவதன் ஆபத்தை இரட்டை கோபுரம் மீதான தாக்குதல்களை அடுத்தே வல்லரசுகள் உணர்ந்து கொண்டன என்பதுடன் பல்வேறு நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்) சட்ட மூலத்தின் ஊடாக பயங்கரவாதிகளுக்கு பணம் செல்வதை தடுக்கலாம் என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிதி தொழில் சட்டமூலம், பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்) பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்) சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், பாராளுமன்ற பொது சபைக்கு குழுவின் மூலம் பெறுமதி சேர்வரி மோசடிகள் இடம்பெற்றுள்ளமையை கண்டுபிடித்தோம், குற்றவாளிகளுக்கு தண்டனை மீதான சட்டத்தின் கீழே தண்டனை வழங்க முடிந்தது என்பதுடன் பணத்தை மீளப்பெற்று உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சட்டங்களுடன் பரிந்துரைகளை மேற்கொண்டு குற்றவியல் பரஸ்பர உதவி சட்டமூலத்தை அமைச்சு விரைவில் தயாரிக்கவிருக்கின்றது. இதன் மூலமாக பயங்கரவாதிகளுக்கு நிதி புழங்குவதும் அதன் வழிமுறைகளையும் தடுக்க முடியும்.
குற்றவியல் பரஸ்பர உதவி சட்ட மூலத்தை பொதுநலவாய நாடுகளுடன் கைகோர்த்து செயற்பட முடியும் என்பதுடன் ஏனைய நாடுகளுக்கு சட்ட உதவிகளை வழங்கவும் முடியும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply