ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் பிரதான தலைவர்களில் ஒருவராக இருந்த ரமேஷ் என்பவர்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி வத்சலாதேவியின் சார்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 66 ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதுடன் அங்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று உரை நிகழ்த்தவுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையை அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply