எம்மைப்பற்றிய தவறான எண்ணங்களைத் தவிர்த்து நட்புக்கரம் நீட்டுங்கள்: நியூயோர்க்கில் ஜனாதிபதி உரை

கடந்த கால துன்பியல் அனுபவங்களை மறந்து நாங்கள் மேலும் பலமான வகையில் முன்னேறிச் சென்று எமது வரலாற்றில் புதிய யுகம் ஒன்றின் சவாலை தைரியமாக ஏற்றுக் கொள்வதற்கு நட்புடன் உங்கள் கரங்களை எங்களுக்கு நீட்டுமாறு கோரிக்கை விடுக்கிறோம். எம்மைப் பற்றி தவறாகக் கொண்டுள்ள எண்ணங்களிலிருந்து மீண்டு வருமாறு தூர இருக்கின்ற நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வட மாகாணத்தில் பயங்கரவாதிகள் கடந்த 30 வருட காலமாக அழித்த உட்கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாப்புப் படையினர் நிகழ்காலத்தில் மேம்படுத்தி வருகின்றனர். துரோகத்தனமான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை மேற்கொள்கின்ற வகையில் ஆயுதம் தாங்கிய இராணுவம் வடக்கில் அதிகளவில் ஈடுபடுத்தப்படவில்லை. அங்கு குறைந்தளவிலான பாதுகாப்புப் படையினரே இருக்கின்றனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நியூயோர்க்கில் நடைபெற்றுவருகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் 66 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply