ஐ.தே.க. உறுப்பினர்களை பாராளுமன்றம் செல்லவிடாது ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குச் செல்லும் வழியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. 
இந்த ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தார்.

அரசாங்கத்தின் ஆதரவாளர்களாலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் துறைமுக சபை ஊழியர்கள் எனவும், இவ்வாறான ஆர்ப்பாட்டங்களின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குச் சென்று கருத்துக்களை வெளியிடமுடியாத சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.

மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா, ஜனாதிபதியின் ஆலோசகர் அஸ்வர் ஆகியோரே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply