ஜனாதிபதியின் சாதனைகளுக்கு உலக தலைவர்கள் பாராட்டு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அமெரிக்க விஜயம் இலங்கை பற்றி சர்வதேச சமூகம் கொண்டிருந்த தப்பபிப்பிராயங்களை போக்கி நாட்டின் உண்மை நிலையை பெரும்பாலான நாடுகளின் அரசாங்கத் தலைவர்களுக்கு விளக்கிக்கூறுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்று சர்வதேச ரீதியில் பாராட்டுக்கு இலக்காகியுள்ளது.
பயங்கரவாத யுத்தம் முடிவுபெற்ற கடைசி நாட்களில் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இலங்கையில் இடம்பெற்றன என்று சர்வதேசரீதியில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நாட்டின் உண்மை நிலையை விளக்கிக்கூறி அத்தகைய சந்தேகங்களை சர்வதேச சமூகத்தின் மனதிலிருந்து நீக்கிவிடுவதற்கு ஜனாதிபதியின் இந்த அமெரிக்கப் பயணம் பேருதவியாக அமைந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் உட்பட பலதேசத் தலைவர்களை சந்தித்து இலங்கையில் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின்னர் நாட்டில் இடம்பெற்றுவரும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றங்கள், வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற செயற்பாடுகளின் மூலம் இன்று இலங்கையில் மீண்டும் அமைதியும், சமாதானமும் நிலைத்திருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கிக்கூறி வெளிநாட்டுத் தலைவர்களின் பாராட்டுக்கும் இலக்காகியிருக்கிறார்.
ஜனாதிபதி அவர்கள் இன்று அரசாங்கம் மேற்கொண்டுவரும் நல்வாழ்வுத்திட்டங்கள் நாடு பொருளாதாரத்துறையில் அடைந்துவரும் முன்னேற்றம் குறித்தும், மக்கள் இன்று பூரண சுதந்திரத்துடன் நிம்மதியாக வாழ்ந்துவருகிறார்கள் என்றும் இலங்கையில் இப்போது இனங்களுக்கிடையே புரிந்துணர்வும், நட்புணர்வும் வளர்ந்துவருகிறது என்று தெரிவித்த கருத்துக்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள இந்த வெளிநாட்டுத் தலைவர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஒரு சாதனையாளர் என்றும் பாராட்டியுள்ளார்கள்.
வேறெந்த நாட்டினாலும் சாதிக்க முடியாத பெரும் சாதனையைப் புரிந்ததன் மூலம் முழு உலகையே கிடுகிடுக்கவைத்த எல்.ரி.ரி.பயங்கரவாதத்தை முற்றாக அடக்கியதன் மூலம் ஜனாதிபதி, பயங்கரவாதத்தினால் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கும் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியான தலைவராக விளங்குகிறார் என்றும் இந்த வெளிநாட்டுத் தலைவர்கள் பாராட்டியுள்ளார்கள்.
ஜனாதிபதி அவர்கள் நேற்றிரவு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரைக்கும் வெளிநாட்டுத் தலைவர்கள் பாராட்டுத்தெரிவித்தி ருப்பது குறிப்பிடத்தக்கதொரு அம்ச மாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply