கொலைக்களம் காணொளியைக் திரையிட்டது ஏற்கக்கூடிய விடயமல்ல : பேராசிரியர் சுனந்த மகேந்திர

இலங்கையின் கொலைக்களம் என்ற செய்திப்படத்தை தனியார் நிறுவனமொன்றே தயாரித்தது. ஆனால் அதை எமது இலத்திரனியல் ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிப்பரப்பியதைக் கண்டோம். இது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இது மக்கள் மனதை குழப்பிய விடயம். நாட்டு மக்களுக்கு இதைக் காட்டியது நல்ல விடயம் அல்ல என்று தெரிவித்தார் களனி பல்கலைக்கழகப் பேராசிரியர் சுனந்த மகேந்திர.

இலங்கைப் பத்திரிகைப் பேரவையும், வடமேல் மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேசச் செய்தியாளர்களுக்கான செயலமர்வு குருணாகல், வாரியப்பொளை விவசாயப் பயிற்சி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கைப் பத்திரிகைப் பேரவைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ. தயாரத்ன, ஞாயிறு லங்காதீப பிரதம ஆசிரியர் ஆரியநந்த தொம்பகஹாவத்த, சிலுமின பிரதம ஆசிரியர் கருணாதாஸ சூரியாராச்சி, மாகாண விவசாய அமைச்சர் ரி.பி. ஹேரத், முன்னாள் பத்திரிகைப் பேரவைத் தலைவர் எஸ். தம்முல்ல ஆகியோர் கலந்து கொண்ட இச் செயலமர்வில் அவர் மேலும் கூறிதாவது,

இலங்கைத் தினசரிப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளில் 60% பிரதேச செய்தியாளர்களின் பங்களிப்பே காணப்படுகின்றது. செய்தியாளர்கள் நாட்டிற்குத் தேவையான ஒன்றைத் தெரிவிக்க துடிப்புடன் செயலாற்றுபவர்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்கும் முன்னர் இலங்கையில் பத்திரிகைப் பேரவை அரசார்பற்ற நிறுவனங்களின் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவற்றின் கைப்பொம்மையாக செயற்பட்டு வந்தது. ஒழுக்கச் கோவையை பின்பற்றாமல் சில ஊடகவியலாளர்கள் பணத்திற்கு அடிமையாகிச் செயற்படுகின்றனர் என்றார். சிலுமின பிரதம ஆசிரியர் கருணதாஸ சூரியராச்சி அங்கு பேசும் போது கூறியதாவது,

செய்திகளை எழுதும் போது தெரிவு செய்து எழுத வேண்டும். அவசரப்பட்டு செய்திகளை எழுதினால் வீண் பிரச்சினைகள் பலவற்றிற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படலாம். ஆராய்ந்து பார்த்து செய்திகளை எழுதினால் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வரலாம். சிலர் தாங்கள் விரைவில் பிரபல்யம் அடையலாம் என தவறான செய்திகளை எழுதுகின்றனர். ஊடகத்துறையில் இது ஏற்புடையது அல்ல. சொற்பிரயோகமும் எண்ணங்களும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பாக இருக்க வேண்டும். அப்போது பிரபல்யமாக முடியும். வாசகர்களுக்கு புரியாத செய்திகளை எழுதக் கூடாது மற்றவர்களை அகௌரவப்படுத்தக்கூடாது. தற்போது சட்டங்கள் பல உள்ளதையும் நிலையிற் கொள்ள வேண்டும். ஊடகவியலாளர்கள் தங்கள் அறிவைப் பெருக்கி தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

ஞாயிறு லங்காதீப பிரதம ஆசிரியர் ஆரியநந்த தொம்பகஹாவத்த இங்கே கருத்து தெரிவித்த போது,

எத்தனை ஊடகங்கள் புதிதாக வந்தாலும் பத்திரிகைத்துறை ஒருநாளும் வீழ்ச்சியடையாது. தினசரிப் பத்திரிகைகளின் துடுப்பானது பிரதேசச் செய்தியாளர்களின் கைகளிலேயே உள்ளது. ஊடகத்துறை இன்று சவால்கள் பல நிறைந்ததாக மாறிவிட்டது. இன்று பாதாள உலகைச் சார்ந்தவர்களுக்கும் புதிய பத்திரிகை ஆரம்பிக்க முடியும்.

ஊடகத்துறையை முற்றாக விளங்கிச் செயற்பட்டால் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லாமல் சிறப்பாகச் செயற்பட முடியும். நாட்டில் நான்காம் பிரஜையான ஊடகவியலாளர்களுக்கு பொறுப்புகள் பல உண்டு. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட கிறீஸ் பேய்கள் விடயமானது. இராணுவத்துடன் தொடர்புடையது. தற்போது யுத்தம் நடைபெற்ற பல இடங்களில் மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ளது. மீள்குடியேற்றம் நடைபெற்ற பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

இராணுவ புலனாய்வுத்துறையினர் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பகுதிக்குச் சென்று தகவல்களைத் திரட்டுவர். சிலவேளைகளில் இரவு நேரங்களிலும் அவர்கள் அங்கு இருக்கும் நிலை ஏற்படுகின்றது. பொது மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின்படி அவர்கள் இராணுவ முகாம்களுக்கு ஓடிச்சென்று ஒளிவதாகக் கூறுவதும் சரியானதே ? என்றார் இந்தச் செயலமர்விற்கு குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நந்த தொம்பகஹாவத்த இங்கே கருத்து தெரிவித்த போது, எத்தனை ஊடகங்கள் புதிதாக வந்தாலும் பத்திரிகைத்துறை ஒருநாளும் வீழ்ச்சியடையாது. தினசரிப் பத்திரிகைகளின் துடுப்பானது பிரதேசச் செய்தியாளர்களின் கைகளிலேயே உள்ளது. ஊடகத்துறை இன்று சவால்கள் பல நிறைந்ததாக மாறிவிட்டது. இன்று பாதாள உலகைச் சார்ந்தவர்களுக்கும் புதிய பத்திரிகை ஆரம்பிக்க முடியும்.

ஊடகத்துறையை முற்றாக விளங்கிச் செயற்பட்டால் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லாமல் சிறப்பாகச் செயற்பட முடியும். நாட்டில் நான்காம் பிரஜையான ஊடகவியலாளர்களுக்கு பொறுப்புகள் பல உண்டு. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட கிறீஸ் பேய்கள் விடயமானது. இராணுவத்துடன் தொடர்புடையது. தற்போது யுத்தம் நடைபெற்ற பல இடங்களில் மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ளது. மீள்குடியேற்றம் நடைபெற்ற பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

இராணுவ புலனாய்வுத்துறையினர் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பகுதிக்குச் சென்று தகவல்களைத் திரட்டுவர். சிலவேளைகளில் இரவு நேரங்களிலும் அவர்கள் அங்கு இருக்கும் நிலை ஏற்படுகின்றது. பொது மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின்படி அவர்கள் இராணுவ முகாம்களுக்கு ஓடிச்சென்று ஒளிவதாகக் கூறுவதும் சரியானதே ? என்றார் இந்தச் செயலமர்விற்கு குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply