சமாதானத்திற்கான மாபெரும் பேரணியில் ஒன்றிணையுமாறு கிழக்கு மக்கள் ஒன்றியம் கோரிக்கை.

கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமாதானத்திற்கான மாபெரும் மக்கள் பேரணி ஒன்று இன்று (26.10.2008) முற்பகல் 10 மணிக்கு மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மக்கள் ஒன்றியம் விடுத்துள்ள துண்டுப் பிரசுரத்தில் வன்னியில் வாழ்கின்ற எமது உறவுகளை பயங்கரவாதிகளிடமிருந்து அரசாங்கம் விரைவில் மீட்டுத்தர வேண்டும். கிழக்கு மக்கள் தற்போது அனுபவிக்கும் அனுகூலங்களை வடக்கு வாழ் உறவுகளும் அனுபவிக்க வேண்டும் என்பதனை நாம் உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியத் தமிழர்கள் மத்தியில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக எழுந்துள்ள உணர்வலைகளை நாம் பாராட்டுகின்றோம் ஆனால் பயங்கரவாதத்தினை வளர்ப்பதாக அது அமைந்து விடக்கூடாது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையிலீடுபட்டுள்ள படையினரும், அரசாங்கத்தினரும் இராணுவ நடவடிக்கையில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்படுவதையும், பாதிக்கப்படுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றோம்.

ஆகவே கிழக்கு வாழ் தமிழ் மக்களே! நம் உறவுகள் படும் அவலத்தை கண்டும் காணாதவர்களைப்போல வாழாமல் அவர்களுக்காக குரல்கொடுப்போம் சமாதானம் வேண்டி 16.10.2008 அன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம் பெறுகின்ற சமாதானத்திற்கான மாபெரும் பேரணியில் ஓர் குடையின்கீழ் அணிதிரண்டு எமது பலத்தையும், ஒருமைப் பாட்டையும் வெளி உலகிற்கு எடுத்துக்காட்டுவோம் என அத்துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply