விடுதலைப் புலிகள் மீதான விசாரணை அடுத்தாண்டு துவங்கும் : அமைச்சர் பீரிஸ்
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் மீது சட்டப்படியான விசாரணை அடுத்தாண்டில் துவங்கும்’ என, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது, போருக்குப் பின் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில், மூவாயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். அதே நேரம், சிறையில் உள்ள இரண்டாயிரத்துக்கும் குறைவானவர்கள் மீது, உள்நாட்டுப் போரின் மீது ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அடுத்தாண்டில் விசாரணை துவக்கப்படும்.
போர் சீரழிவுகளில் இருந்து மீள்வதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள், பொருந்தாத வகையில் விமர்சித்து வருகின்றன. அரசியல் கால்பந்தாக இலங்கையை அந்நாடுகள் பயன்படுத்துகின்றன. தனது பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இலங்கைக்குப் போதிய காலம் உள்ளது. அதற்கு முன்பே இப்பிரச்னைகளில் சர்வதேச சமூகம் தலையிடுவது, அவசரக்குடுக்கைத்தனம் தான். இவ்வாறு பீரிஸ் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply