ஜனாதிபதி மகிந்த இன்று நாடு திரும்பினார்
நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 5.30 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல்- 228 என்ற விசேட விமானத்தில் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஐக்கியநாடுகள் சபையின் 66 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த19 ஆம் திகதி நியூயோர்க் செனறிருந்த ஜனாதிபதி பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்த அவர், ஐ.நா செயலாளர் நாயகம் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களைச் சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply