கூட்டமைப்புடன் பேசி அரசியல் தீர்வை விரைவாக முன்வைக்க இந்தியா மீண்டும் வலியுறுத்தல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்வார்த்தை நடத்தி அரசியல் தீர்வை விரைவாகக் காண முன்வர வேண்டும் என சிறிலங்காவை இந்தியா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் சிறிலங்கா பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகமவுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் இந்திய நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அதன்போது தமிழர் பிரச்சனையில் பேச்சுவார்த்தைகளின் மூலமே சமாதானத் தீர்வு ஏற்பட வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும் அதற்காக சிறிலங்கா அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முக்கிய அரசியல் விடயங்களில் தீர்வுகளை முன்வைத்து இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
சமாதானத் தீர்வின் மூலம் தமிழர்கள் சமாதானமாகவும் நீதியுடனும் வாழுவதை இந்தியா விருப்பம் என முகர்ஜி, அமுனுகமவிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply