ருத்ரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்காவின் உதவி நாடப்படவுள்ளது

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.ருத்ரகுமாரன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவிகளை வழங்கியமைக்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இந்த ஆதாரங்களை சமர்ப்பித்து அமெரிக்காவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில நாடுகளில் காணப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான கப்பல்களை ருத்ரகுமாரன் பராமரித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாக நவீன ரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக ருத்ரகுமாரன் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை புலிகளுக்கு வழங்கியமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், படையினருக்கு எதிராகவும் வழக்குகளைத் தொடுக்கும் நடவடிக்கைகளை ருத்ரகுமாரன் ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply