ஏனைய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதில்லை : ஜே.வி.பி

ஏனைய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேரப் போவதில்லை என ஜே.வி.பி அறிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என ஜே.பி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
எனினும் சமத்துவ கொள்கைகளின் அடிப்படையில் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2004ம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கும்இ 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும்இ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் ஜே.வி.பி கூட்டணியாக களமிறங்கியது.
 
இதேண்ளைஇ எதிர்வரும் காலங்களில் கூட்டணி சேர்வதில்லை என சில காலங்களுக்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பிமால் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 
எனவேஇ ஜே.வி.பி வேறும் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதாகத் தெரிவித்து கட்சியை விட்டு விலகி கிளர்ச்சி நடத்துவதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு விரைவில் தீர்வுகள் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply