மீள்குடியேற்றம், இளைஞர், யுவதிகளின் விடுதலை ஜனாதிபதியிடம் டக்லஸ் எடுத்துரைப்பு

விரைவானதும் கௌரவமானதுமான அரசியல் தீர்வுத்திட்டம், மீள்குடியேற்றம் செய்யப்படாதிருக்கும் மக்களை விரைவில் மீள்குடியேற்றம் செய்வது, புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சி இருக்கும் இளைஞர், யுவதிகளை விரைவில் விடுவிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்|விற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்~விற்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அமைச்சர் டக்ளஸின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை கூடிய விரைவாக விசாரணைகள் செய்வது அவர்களை விடுதலை செய்வது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இங்கு கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply