தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்கிறார் : சம்பிக்க ரணவக்க
பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதத்திற்கும் துணைபோனவர்களுக்கு எதிராக உள்நாட்டில் விரைவில் போர்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கான சட்ட அங்கீகாரம் அரசியலமைப்பின் 157 ஆவது பிரிவில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் எந்தவொரு தரப்பையும் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கு இடமளிக்கக் கூடாது. இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் சூழ்ச்சிகளின் பின்னணியில் உள் நாட்டில் சுதந்திரமாக உலாவும் பிரிவினைவாத சக்திகளே இருக்கிறன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தகவல் தெரிவிக்கையில், அரசிற்கும், பாதுகாப்புத் தரப்புகளுக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்நாட்டிற்குள் இருந்து கொண்டு பலர் செயற்படுகின்றனர். ஐ.நா. உள்ளிட்ட சர்வதேசத்தின் இலங்கைக்கு எதிரான சதிகளுக்கு இவர்கள் தகவல்களை கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக ஐ.நா.வின் நிபுணர்குழு அறிக்கைக்கு மிகவும் போலியான தகவல்களை நாட்டிற்கு எதிரான வகையில் உள்நாட்டிலிருந்தே வழங்கியுள்ளனர்.
இவ்வாறான தேசத்துரோக செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்திற்கு பிரிவினைவாதத்திற்கு துணை சென்றவர்களையும் தொடர்ந்து துணை செல்பவர்களையும் விஷேட நீதிமன்றில் போர்க்குற்றங்களின் அடிப்படையில் விசாரணை செய்ய வேண்டும்.
இலங்கை அரசியலமைப்பின் 157 வது பிரிவில் பிரிவினைவாதத்திற்கு எதிரான சட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றை பயன்படுத்தி உள்நாட்டில் செயற்படும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். பயங்கரவாதத்தில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையில் தற்போது அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
இதனை சீர்குலைத்து நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத் துவதே சதிக்காரர்களின் திட்டமாகும்.
இதற்கு ஏதுவான பொறிமுறைகளே தற்போது சர்வதேசத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே சவால்களை இனங்கண்டு நாட்டில் பிவினைவாத கொள்கைகளுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply