மக்களுக்குச் செய்யவேண்டியதை சரியான தருணத்தில் திறம்பட செய்வோம் : சம்பந்தன்
தமிழ் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் சரியான தருணத்தில் திறம்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யும் என கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஊடகங்களில் வெளியாகும் எல்லா செய்திகளுக்கும் தன்னால் பதிலளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.நா.நிபுணர் குழுவுக்கு இரகசியத் தகவல்களை வழங்கியுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை கேட்ட போதே சம்பந்தன் எம்.பி., தமிழ் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை தாம் சரியான நேரத்தில் திறம்பட செய்வோம் எனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply