இலங்கை வரும் இந்திய வெளிவிவகாரச செயலாளர்: ஐனாதிபதி உட்பட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை
இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்ன் மாத்தாய் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வருவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இலங்கைக்கு வரும் அவரின் பயணம் யாழ்ப்பாணம் வரை தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அவர் சந்தித்து அரசியல் பேச்சு மற்றும் தீர்வு குறித்துப் பேச உள்ளார்.
வெளிவிவகாரச் செயலராகப் பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவே.மாத்தாயின் பயணம் 8ஆம் திகதி ஆரம்பமாகிறது என புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, புனர்வாழ்வுத் திட்டங்கள் குறித்தும் மாத்தாய் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த நிருபமாராவ் பதவி விலகிச் சென்றதன் பின்னர் அந்தப் பதவியைப் பொறுப்பேற்றவர் ரஞ்சன் மாத்தாய். கொழும்புக்கு அதிகம் பரிச்சயமற்றவர் இவர் என்று ராஜதந்திர வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தனது பயணத்தின்போது யாழ்ப்பாணம் வருவதற்கும் மாத்தாய் திட்டமிட்டிருக்கிறார் என்று தெரியவருகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு 50,000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந்தியத் திட்டத்தின் பணிகளைப் பார்வையிடும் நோக்குடன் அவர் இங்கு வருகை தரவுள்ளார். அதேவேளை அவர் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply