ஐ.சி.ஆர்.சி. தொடர்ந்தும் வன்னியிலிருக்கும் அவ்வமைப்பின் ஊடகப் பேச்சாளர் சரசி விஜயரட்ன கூறினார்

வன்னிப் பகுதியில் மோதல்கள் நடைபெற்றாலும் அங்கு தங்கியிருந்து பொதுமக்களுக்குத் தேவையான மனிதநேய உதவிகளை செய்யப் போவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
 
வன்னியில் மனிதநேய உதவிகள் தேவைப்படும்வரை அங்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தங்கியிருக்குமென அவ்வமைப்பின் ஊடகப் பேச்சாளர் சரசி விஜயரட்ன கூறினார்.
  
இலங்கை இராணுவத்தினரால் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதையடுத்து, புதுக்குடியிருப்புப் பகுதியில் தற்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் செயற்பட்டுவருவதாகத் தெரிவித்த அவர், அங்கிருந்து வன்னி மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் வழக்கப்படும் எனக் கூறினார்.

மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பினரிடமிருந்தும் பாதுகாப்பு உத்தரவாதம் பெற்றிருப்பதால் வன்னியிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்குப் பாதிப்பு ஏற்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.

இரண்டு தரப்பினருடனும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருவதால் பாதுகாப்பு உத்தரவாதம் மேலும் பலப்படுத்தப்பட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் கூறினார்.

விடுவிக்கப்படாத பகுதியிலுள்ள மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மனிதநேய உதவிகளைச் செய்துவருவதுடன், அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து செல்லும் உணவு லொறிகள் மற்றும் கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் நோயாளர்காவு வண்டிகளுக்கு வழித்துணை வழங்கி வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply