பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் திடீர் இராஜினாமா

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் கலாநிதி லியாம் பொக்ஸ் தனது பதவியை நேற்று ராஜினாம செய்துள்ளார். அவரது நெருங்கிய நண்பரும் ஆலோசகராகக் கருதப்படுவருமான அடம் வெரைட்டியுடனான தொடர்பு மற்றும் இலங்கையில் நிறுவனமொன்றினை நிறுவ துணைபோனமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களால் எழுந்த சர்ச்சையினையடுத்தே ராஜினாமா செய்யும் முடிவினை அவர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது இந்த முடிவு தொடர்பில் லியாம் பொக்ஸ் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுக்கு எழுத்துமூலம் நேற்றுக் காலை அறிவித்துள்ளார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் கெமரூனும் கடிதம் ஒன்றை பொக்ஸூக்கு அனுப்பிவைத்துள்ளார்.

பொக்ஸ் 1992 ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார்.

இலங்கையின் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் தொடர்பில் பிரித்தானியவின் சார்பில் அதிக கவனம் செலுத்தி வந்த பொக்ஸ், இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ளதுடன் ஜனாதிபதி உள்ளிட்ட நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், லியாம் பொக்ஸின் நீண்ட கால நண்பரும் அவரது ஆலோசகர் என அறியப்பட்டவருமான அடம் வெரைட்டி என்பவரை பொக்ஸ் தன்னுடன் பல நாடுகளுக்கு அழைத்துச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரித்தானிய வெளியுறவுச் சட்டவிதிகளைத் தவறாக பயன்படுத்தியுள்ளதாக அவர் மேல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை மீள்நிர்மாணம் செய்வதற்கான தனியார் நிதி வசதியினை பெற்றுக்கொடுப்பதை அடிப்படை நோக்காகக்கொண்ட ஸ்ரீலங்கா டெவலப்மன் ட்ரஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கும் முயற்சிக்கு வெரைட்டியுடன் சேர்ந்து மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் மேல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தனது கருத்துக்களை லியாம பொக்ஸ் ஒரு சில தினங்களாக தெரிவித்துவந்தார். இந்நிலையிலேயே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply