இலங்கையில் பாராளுமன்றில் கொலையாளிகள் நிரம்பியுள்ளனர் : முன்னாள் ஜனாதிபதிசந்திரிக்கா
பாராளுமன்றில் கொலையாளிகளும், திருடர்களுமே நிரம்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். கொரகொல்ல பிரதேசத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தை பிரதிநித்துவம் செய்யும் சகல கட்சிகளிலும் கொலைகாரர்களும், திருடர்களும் நிரம்பி வழிவதாகத் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பணத்தை களவாடும் நோக்கில் குறித்த நபர்கள் அரசியலில் களமிறங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிரச தொலைக்காட்சி சேவையில் சந்திரிக்காவின் செவ்வி நேற்றைய தினம் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. தாய், தந்தை, மகள்மார், மகன்மார் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகலரும் அரசியலில் குதித்து விடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தலைமுறையை இந்த குழப்ப நிலைமைகளிலிருந்து மீட்பது பொருத்தமற்றது எனினும், எதிர்கால சந்தததியினரை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply