கொலன்னாவ சம்பவம் மக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடும் : ருவான் விஜேவர்தன
கொலன்னாவ சம்பவம் மக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். டட்லி சேனாநாயக்க நினைவுப் பேருரையில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொலன்னவ படுகொலைச் சம்பவம் போன்ற சம்பவங்கள் மக்களை கிளர்ச்சியடைச் செய்யும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவல்துறை ஆணைக்குழு, நீதித்துறை ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியன இன்னமும் நிறுவப்படாமை பெரும் துரதிஸ்டமாகவே கருத வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான சட்ட ஒழுங்குகள் செய்யப்பட்ட போதிலும் இன்னமும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்க மிக முக்கியமான ஓர் மனித உரிமை செயற்பாட்டாளர் என அவர் பாராட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply